Friday, April 17, 2026

சாத்தான்குளம் ( April 2026)

 சாத்தான்குளம்


சாத்தான்குளம்…

பெயரிலே பிரச்சனையோ?

அல்லது

காவல் தெய்வங்கள்

சாத்தான்களாக மாறினவோ?


ஹிட்லரின் வம்சமோ?

எமனின் தூதர்களோ?

இரவு முழுவதும்

மரணக் கதறல்—

அது என்ன

இளையராஜாவின் சிம்பொனியோ?


மனிதம் மிருகமாகும்

காரணம் என்ன?


அதிகாரமோ?

திமிரோ?

லஞ்சமோ?

சாதியோ?

போதையோ?

சுமையோ?

அரசியலோ?

சிந்தனையே

குலைந்து…

நடுங்குகிறது…


நீதி தேவதை

கண் கலங்குகிறாள்…

அவள் கண்ணீரை துடைக்க

இருந்தால்—

ஒரு தேவதை,

“இரேவதி”

என்னும் காவல் தேவதை!


நீதி தண்டனை தருகிறது…

ஆனால்—

அது

காரணத்தை கடிகிறதா?

அல்லது

குற்றத்தைத் தடுக்கிறதா?


நீதி வென்றதா?

சில குற்றவாளிகள்

விடுபட்டார்களா?


நீதி வென்றுவிட்டதோ…?

அல்லது

நாம்தான்

பொறுத்துக்கொண்டிருக்கிறோமா…?


தண்டனை மனிதர்களுக்கு சரி…

ஆனால்—

இக்குற்றங்களை

இன்னும் தொடரச் செய்யும்

இந்த அமைப்புக்கு…


யார் தண்டனை?

No comments:

Post a Comment