விலங்கு (Chain)
கருவறையிலிருந்து
தொப்புள் கொடி விலக்கு – விடுதலை
இறுதி கால்விரல்
விலங்கு – விடுதலை
இந்த இடைவேளியில்
பல விலங்குகள் நம் மனதில்!
இது தான் மனித வாழ்க்கை!!
சித்தனின் சிந்தனையோ!
அடியவனின் பொலம்பலோ!
சித்தனிடம் ஓர் வினா!
மனத்தின் விலங்கு
சுய ஒழுக்கமும் தானே?
விலங்கு அகன்றால், மானுடம்
விலங்கு (உயிரினம்) ஆகிவிடுமா?
சித்தனின் பதில் ஒரு வினா!
ஒழுக்கமே விலங்கென்றால்
பிறப்பே ஒரு விலங்கு தானே?
சுய விலங்கே மானுடத்தின்
விளக்கம்,
அன்றேல் நீயும் விலங்கு தானே?
No comments:
Post a Comment