Sunday, January 18, 2026

பொங்கல் பரிசு ( capturing some thoughts on Pongal scheme and social divisions)

 பொங்கல் பரிசு

மாடி வீட்டு டாமி

உண்டு… உண்டு…

புது ஆடை உடுத்து,

படுக்கையில் உறங்கி விழித்து,

குரைத்துக் கொண்டே—

கோபமும் கூட!


தன் தெருவின் எல்லையில்

வெயிலிலும் மழையிலும்

சுற்றித் திரியும்

இராமுவுக்கு 

இன்று—

யாரோ உணவிட்டார்கள்!

அந்த ஒரு நாள்

அவனுக்கான பொங்கல்…

தனக்கு எங்கே என்ற

கோபம் மட்டும்

டாமியின் கண்களில்!

— பொங்கல் பரிசு

Saturday, December 13, 2025

விலங்கு (Chain) - Kavithai after a long gap!!

 விலங்கு (Chain)


கருவறையிலிருந்து

தொப்புள் கொடி விலக்கு – விடுதலை

இறுதி கால்விரல்

விலங்கு – விடுதலை


இந்த இடைவேளியில்

பல விலங்குகள் நம் மனதில்!

இது தான் மனித வாழ்க்கை!!


சித்தனின் சிந்தனையோ!

அடியவனின் பொலம்பலோ!


சித்தனிடம் ஓர் வினா!

மனத்தின் விலங்கு

சுய ஒழுக்கமும் தானே?

விலங்கு அகன்றால், மானுடம்

விலங்கு (உயிரினம்) ஆகிவிடுமா?


சித்தனின் பதில் ஒரு வினா!

ஒழுக்கமே விலங்கென்றால்

பிறப்பே ஒரு விலங்கு தானே?

சுய விலங்கே மானுடத்தின்

விளக்கம்,

அன்றேல்  நீயும் விலங்கு தானே?


Saturday, March 7, 2020

March 8 2020 - Women's day - posting after years

நீயே எம் புவி
நீயே எம் பூமி
நீயே எம் நதி
நீயே எம் நீதி
நீயே எம் ஜான்சி
நீயே எம் இராணி
நீயே எம் கல்வி
நீயே எம் செல்வி
நீயே எம் ஔவை
நீயே எம் தொன்மை
நீயே எம் தமிழ் நேசம்
நீயே எம் இந்திய தேசம்
இதுவே எம் மரபு!
இடையே உருவ திரிபு!
எம் தாயே நீ உணர்வாய்
எம் சேயே:
இத் திரிபு கலைத்து
மரபை ஈன்றெடுத்து
எழுவாய்!
எம் சமுகத்தை எழுவாய்!

Excuse spelling mistakes

Monday, April 15, 2013

Hi-koo kavithai


எழுத எழுத
தனக்குத் தானே
லைக் போட்டு கொண்டது
-- புதுக்கவிதை 

Sunday, March 31, 2013

Delhi disaster - Tamil

மோகினி  ஆட்டம்

தலைநகரமா  
தலைநரகமா  
என்ற ஐயம் !

தெருக்கள் அனைத்திலும்  
மார்கழி மாத நாய்கள் ஜாக்கிரதை -
அரசின் அஜாக்கிரதை !
தெருக்கள்  எங்கும் பெண்டிரே
கயவர்கள் ஜாக்கிரதை !

ஆடை கலைந்து குற்றம் புரிந்த
ஒரு கயவன் 
ஆடை களைந்து தூக்கில் தொங்கிய 
விந்தை என்ன !
சிறையறை கல்லறையாய் மாறிய மாயம் என்ன !
விந்தையும் மாயமும் மாய உலகின் மர்மம் தானே !

நினைக்க தோன்றுகிறது மோகினி பிறந்து விட்டாளோ !
ஆட்டம் தொடங்கி விட்டாளோ !
நம்பிக்கை தந்து விட்டாளோ !
கயவர்களே ஜாக்கிரதை !

இனி ஒரு விதி செய்வோம் !
நம்புவோர் நம்பட்டும் நம்பாதோர் இருக்கட்டும் 
இந்த ஒரு பணி நடக்கட்டும் - இல்லையினில் 
தவறேதும் இல்லை மோகினி தான் பிறக்கட்டும் 
வேறு வழி இல்லை 
இந்திய தாயாய் நாட்டை காக்கட்டும் !

Sunday, March 17, 2013

Tamil - Mukthi

முக்தி

ஆன்மிகத்தின் முக்தி -
இறைவன் அடி தேடி சேர்வது
நாத்திகத்தின் முக்தி -
இறைவணை அருகில் உணர்வது
சித்தாந்தம் வேறுஎனினும்
சித்தனின் நாதம் ஒன்றே -
முக்தி !!

Sunday, September 30, 2012

Back after a long time - Sep 30, 2012

ஏக்கம் 

அன்பிற்கே
அன்பில்லா ஏக்கம் -
காபகத்தில் தாய்!