மோகினி ஆட்டம்
தலைநகரமா
தலைநரகமா
என்ற ஐயம் !
தெருக்கள் அனைத்திலும்
மார்கழி மாத நாய்கள் ஜாக்கிரதை -
அரசின் அஜாக்கிரதை !
தெருக்கள் எங்கும் பெண்டிரே
கயவர்கள் ஜாக்கிரதை !
ஆடை கலைந்து குற்றம் புரிந்த
ஒரு கயவன்
ஆடை களைந்து தூக்கில் தொங்கிய
விந்தை என்ன !
சிறையறை கல்லறையாய் மாறிய மாயம் என்ன !
விந்தையும் மாயமும் மாய உலகின் மர்மம் தானே !
நினைக்க தோன்றுகிறது மோகினி பிறந்து விட்டாளோ !
ஆட்டம் தொடங்கி விட்டாளோ !
நம்பிக்கை தந்து விட்டாளோ !
கயவர்களே ஜாக்கிரதை !
இனி ஒரு விதி செய்வோம் !
நம்புவோர் நம்பட்டும் நம்பாதோர் இருக்கட்டும்
இந்த ஒரு பணி நடக்கட்டும் - இல்லையினில்
தவறேதும் இல்லை மோகினி தான் பிறக்கட்டும்
வேறு வழி இல்லை
இந்திய தாயாய் நாட்டை காக்கட்டும் !