Saturday, March 7, 2020

March 8 2020 - Women's day - posting after years

நீயே எம் புவி
நீயே எம் பூமி
நீயே எம் நதி
நீயே எம் நீதி
நீயே எம் ஜான்சி
நீயே எம் இராணி
நீயே எம் கல்வி
நீயே எம் செல்வி
நீயே எம் ஔவை
நீயே எம் தொன்மை
நீயே எம் தமிழ் நேசம்
நீயே எம் இந்திய தேசம்
இதுவே எம் மரபு!
இடையே உருவ திரிபு!
எம் தாயே நீ உணர்வாய்
எம் சேயே:
இத் திரிபு கலைத்து
மரபை ஈன்றெடுத்து
எழுவாய்!
எம் சமுகத்தை எழுவாய்!

Excuse spelling mistakes

Monday, April 15, 2013

Hi-koo kavithai


எழுத எழுத
தனக்குத் தானே
லைக் போட்டு கொண்டது
-- புதுக்கவிதை 

Sunday, March 31, 2013

Delhi disaster - Tamil

மோகினி  ஆட்டம்

தலைநகரமா  
தலைநரகமா  
என்ற ஐயம் !

தெருக்கள் அனைத்திலும்  
மார்கழி மாத நாய்கள் ஜாக்கிரதை -
அரசின் அஜாக்கிரதை !
தெருக்கள்  எங்கும் பெண்டிரே
கயவர்கள் ஜாக்கிரதை !

ஆடை கலைந்து குற்றம் புரிந்த
ஒரு கயவன் 
ஆடை களைந்து தூக்கில் தொங்கிய 
விந்தை என்ன !
சிறையறை கல்லறையாய் மாறிய மாயம் என்ன !
விந்தையும் மாயமும் மாய உலகின் மர்மம் தானே !

நினைக்க தோன்றுகிறது மோகினி பிறந்து விட்டாளோ !
ஆட்டம் தொடங்கி விட்டாளோ !
நம்பிக்கை தந்து விட்டாளோ !
கயவர்களே ஜாக்கிரதை !

இனி ஒரு விதி செய்வோம் !
நம்புவோர் நம்பட்டும் நம்பாதோர் இருக்கட்டும் 
இந்த ஒரு பணி நடக்கட்டும் - இல்லையினில் 
தவறேதும் இல்லை மோகினி தான் பிறக்கட்டும் 
வேறு வழி இல்லை 
இந்திய தாயாய் நாட்டை காக்கட்டும் !

Sunday, March 17, 2013

Tamil - Mukthi

முக்தி

ஆன்மிகத்தின் முக்தி -
இறைவன் அடி தேடி சேர்வது
நாத்திகத்தின் முக்தி -
இறைவணை அருகில் உணர்வது
சித்தாந்தம் வேறுஎனினும்
சித்தனின் நாதம் ஒன்றே -
முக்தி !!

Sunday, September 30, 2012

Back after a long time - Sep 30, 2012

ஏக்கம் 

அன்பிற்கே
அன்பில்லா ஏக்கம் -
காபகத்தில் தாய்!


  

Sunday, February 20, 2011

Feb 14

Feb 14 - காத்திருப்பேன்! வந்துவிடு!        

 " என்னுயிர் நண்பனின்
   இன்னுயிர் காதலி
   கட்டி தழுவி முத்தங்களுடன்
   பகிர்ந்து கொண்டால், 
  அவளுது காதலை  என்னுடன்!"

மனதில் கலகத்துடன்!
கண்களில் களகத்துடன்!
என் விரல்கள் வரடின,
அவனது டைரியின் பக்கங்களை. 
என்னைப்பற்றி அவனது எண்ண அலைகளை!

வந்துவிட்டன் எங்களது நட்பின் கடைசி அதிகாரத்துக்கு!
ஆம்! அந்த டைர்யின் கடைசி பக்கங்களுக்கு!

" என்னை மன்னித்துவிடு நண்பா!
  உங்களது உறவு புனித நட்பு என்றால்
  நம்பி இருந்தேன் எனது காதலின் பற்றால்!
  இந்த காதலர் தினத்தில்,
  என் மற்ற்றொரு நண்பன், அவள் காதல்
  கூறியதாக  கூறினான்!  
  இப்பொழுது நான் நண்பன்!
  புரிந்தது "என்" நிலையில் போன வருடம்! "நீ"! 
  மன்னித்துவிடு நண்பா!
  கணவிலும் நட்புக்கு துரோகம் நினைக்காதவன்
  அறியாமியில் துரோகம் புரிந்து விட்டன்!"

மனதில் மகழிச்சி!
கண்களில் எழுச்சி!
மறுபடியும் நட்பின் மலர்ச்சி!

இனி காத்து இருப்பேன்! எல்லா Feb  14 கும்!
காதல் வேண்டி அல்ல!
உன்னை காண வேண்டி!
வந்துவிடு நண்பா!
நமது நட்பின் வலிமையை- 
அறியட்டும் அந்த பேடி!
காத்திருப்பேன்! வந்துவிடு!                             

         

New Tamil Kavithai- Feb '11

                      கறை நல்லது!

கறை வேட்டிகளின்
கைகளிள் கறை! 
அரசியல் கலங்கரையில்
ஊழலின் கலங்கு அறை!

கறை நல்லது!
விளம்பரத்தின் பாதிப்பு போலும்
தமிழ்வேந்தன்(ராஜா) பூண்டான் சிறைகோலம்!                      

அவன்பால் அன்புண்டோர் பலர்!
அவருள் மூத்த தமிழ் கலைஞரும் ஒருவர்!
எத்துனை அழகான கவி பாடினர்!
பெருமைகளை போற்றி,வேந்தனை பற்றி! 
கவித்துவத்தில் விளங்கியது அரசியலின் சூழ்ச்சி!                
         
சற்றே சிந்திதால் விலங்கும்!
கலைஞர் உரைத்த  உண்மைகள் புரியும்!

கீழ் ஜாதி என்பதனால் தூண்டப்பட்டான்!
உண்மைதான்!
அரசியல் ஜாதியில் ஊழல் வாதிகில் கீழ் ஜாதிதான்!
மலிவு விலையில் மக்கள் திட்டம் தவறுதான்!
உண்மைதான்!
சில மக்களுக்கு மட்டும் மலிவு திட்டம், மலிவுதான்!


இலச்ச கோடிகள் கணக்கும் பிழைதான்!  
உண்மைதான்!
படிப்பறிவு இல்லாதவன் இத்துனை கோடிகளை!
எப்படி  என்னி   இருப்பான்!
இல்லை எண்ணி தான் கேட்டு இருப்பான்!                      
உண்மைதான்! கலைஞர் கவி உண்மைதான்!

கறை நல்லது! கறை நல்லது!

அரசியல் தலைவர்களுக்கு தேசத்து மீது அக்கறை!
வாக்களர்களுக்கு தேர்தலின் பொது ஜனநாயகத்தில் அக்கறை!
அக்கறைகல்  இருந்தால்!
கறை நல்லது! கறை நல்லது!